ஆட்டோமொபைல்

இந்தியாவில் பென்லி டி.ஆர்.கே. 502 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

Published On 2019-02-19 11:13 GMT   |   Update On 2019-02-19 11:13 GMT
பென்லி நிறுவனத்தின் புதிய டி.ஆர்.கே. 502 அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #BenelliTRK502 #Motorcycle



பென்லி நிறுவனம் தனது புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பென்லி இந்தியாவின் முதல் அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிளாக புதிய டி.ஆர்.கே. 502 மாடல் அறிமுகமாகி இருக்கிறது. 

இந்தியாவில் பென்லி டி.ஆர்.கே. 502 ஸ்டாண்டர்டு வேரியண்ட் விலை ரூ.5.0 லட்சம் என்றும் ஆஃப்-ரோடு வேரியண்ட் விலை ரூ.5.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மோட்டார்சைக்கிள்களுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கிவிட்டன. புதிய பென்லி டி.ஆர்.கே. 502 முன்பதிவு கட்டணம் ரூ.10,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய மோட்டார்சைக்கிளில் டூயல் ஹெட்லேம்ப் செட்டப், எல்.இ.டி. இன்டிகேட்டர்கள் மற்றும் டெயில்லைட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் வழக்கமான அட்வென்ச்சர் அம்சங்களான கூர்மையான முன்பக்க ஃபென்டர், பெரிய விண்ட்ஸ்கிரீன் மற்றும் ஹேண்டில் பாரில் நக்கிள் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.



பென்லி டி.ஆர்.கே. 502 மாடலின் இரு வெர்ஷன்களிலும் 500சிசி பேரலெல் ட்வின், லிக்விட்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 47 பி.ஹெச்.பி. @8500 ஆர்.பி.எம்., 46 என்.எம். டார்க் @6000 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வருகிறது. இந்த என்ஜின் ஹைட்ராலிக் ஆக்சுவேட் செய்யப்பட்ட கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது.

சஸ்பென்ஷன் அம்சங்களை பொருத்தவரை முன்பக்கம் 50 எம்.எம். யு.எஸ்.டி. ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பைக்கின் முன்புறம் 320 எம்.எம். டூயல் டிஸ்க் பிரேக்களும், பின்புறம் டூயல்-சேனல் ஏ.பி.எஸ். யூனிட் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் பென்லி டி.ஆர்.கே. 502 மோட்டார்சைக்கிள் கவாசகி வெர்சிஸ் 650, சுசுகி வி ஸ்டாம் 650 XT, பி.எம்.டபுள்யூ. ஜி 310 ஜி.எஸ். மற்றும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.
Tags:    

Similar News