செய்திகள்
கோப்புபடம்

பத்திர பதிவுக்காக இரவு வரை காத்திருக்கும் பொதுமக்கள்

Published On 2021-09-23 04:36 GMT   |   Update On 2021-09-23 04:36 GMT
தமிழக அரசு உத்தரவின்படி தினசரி 200 டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. சுப முகூர்த்தம் மற்றும் விசேஷ நாட்களில் ஏராளமான பத்திரங்கள் பதிவுக்கு வருகின்றன.
திருப்பூர்:

பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்தின் கீழ் பல்லடம், பொங்கலூர், திருப்பூர் ஒன்றியத்தின் ஒரு பகுதி என 39 கிராமங்கள் உள்ளன. தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

அதிக அளவில் ஆவணங்கள் வருவதால் தினசரி இரவு வரை பத்திரப்பதிவு பணிகள் நீடித்து வருகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

தமிழக அரசு உத்தரவின்படி தினசரி 200 டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. சுபமுகூர்த்தம் மற்றும் விசேஷ நாட்களில் ஏராளமான பத்திரங்கள் பதிவுக்கு வருகின்றன.

சாதாரண நாட்களிலேயே பணிகள் இரவு வரை நீடிக்கின்றன. அலுவலக உதவியாளர் 31-ந் தேதியுடன் பணியிலிருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து புதிய பணியாளர் நியமிக்கப்படவில்லை. 

அதன் காரணமாக சீல் வைப்பது, பத்திர வினியோகம் உள்ளிட்ட பணிகள் தாமதமாகின்றன. இதனால் பத்திரம் பெற இரவு வரை காத்திருக்க வேண்டி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News