ஆன்மிகம்
திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவிலில் ருத்ராபிஷேகம்

திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவிலில் ருத்ராபிஷேகம்

Published On 2020-08-19 08:20 GMT   |   Update On 2020-08-19 08:20 GMT
1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோமுக்தீஸ்வரர் கோவிலில் மாசிலாமணியீஸ்வரர், ஒப்பிலாமுலையம்மைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், ருத்ராபிஷேகம் நடைபெற்றது.
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறையில் சமயக்குரவர்கள் மூவரால் பாடப்பட்ட 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோமுக்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

ஆவணி மாதம் 1-ந் தேதி மாசிலாமணியீஸ்வரர், ஒப்பிலாமுலையம்மைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், ருத்ராபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 5 ஓதுவார்கள், கொரனா நோய் ஒழிய வேண்டி தமிழ் திருமுறை திருப்பதிகங்களை வாசித்தனர்.

அதனையடுத்து சாமி மற்றும் அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. திருவாவடுதுறை மடாதிபதி அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட பக்தர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News