ஆன்மிகம்
திருவந்திபுரம் தேவநாதசுவாமி

திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை தரிசனத்துக்கு தடை

Published On 2020-09-17 06:11 GMT   |   Update On 2020-09-17 06:11 GMT
குணசீலத்தில் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) தொடங்குகிறது. விழாவை பக்தர்கள் இணையதளத்தில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடலூர் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடக்கும். இதனால் சாமியை தரிசனம் செய்வதற்காகவும், முடிகாணிக்கை செலுத்தவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

அதன்படி இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை (வருகிற 19-ந்தேதி), 2-வது சனிக்கிழமை(26-ந்தேதி), 3-வது வெள்ளிக்கிழமை(அடுத்த மாதம் 2-ந்தேதி), 3-வது சனிக்கிழமை(3-ந்தேதி), 4-வது சனிக்கிழமை(10-ந்தேதி) ஆகிய நாட்களில் பக்தர்கள் தரிசனம் மற்றும் முடிகாணிக்கை செலுத்த மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்படுகிறது.

ஆகவே பொதுமக்கள் இந்த நாட்களில் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். கொரோனா தடுப்பு பணியில் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News