லைஃப்ஸ்டைல்
மகராசனம்

ஆஸ்துமா நோய்க்கு சிறந்த ஆசனம்

Published On 2020-02-06 03:45 GMT   |   Update On 2020-02-06 03:45 GMT
ஆஸ்துமா நோய் அதிகமாக இருக்கும் பொழுது அவர்களால் மல்லாந்து படுக்க முடியாது. அந்த சமயத்தில் இந்த மகராசனம் ஐந்து நிமிடம் முதல் பத்து நிமிடங்கள் செய்தால் மூச்சோட்டம் சரியாகிவிடும்.
ஆஸ்துமாவினால் நுரையீரல் பாதிப்பு இருக்கும். இதயப் பலவீனம் இருக்கும். இதற்கு எளிமையான மிக அற்புதப் பலன் தரும் ஆசனம் தான் மகராசனமாகும்.
ஆஸ்துமா நோய் அதிகமாக இருக்கும் பொழுது அவர்களால் மல்லாந்து படுக்க முடியாது. அப்படி படுக்க முயற்சித்தாலும் அவர்களுக்கு மூச்சுத் திணறல், நெஞ்சுவலி ஏற்படும். அந்த சமயத்தில் இந்த மகராசனம் ஐந்து நிமிடம் முதல் பத்து நிமிடங்கள் செய்தால் மூச்சோட்டம் சரியாகிவிடும். உடலுக்கும், நாடி நரம்புகளுக்கும் நல்ல ஓய்வு கிடைக்கும்.

செய்முறை


குப்புறப்படுத்துக்கொள்ளவும். இரண்டு கைகளையும் முன்னால் கொண்டு வரவும். வலது கையை மடித்து இடது தோள்பட்டை மீதும், இடது கையை மடித்து வலது தோள்பட்டையின் கீழும் வைத்து முகத்தை கைகளின் இடையே வைத்து நெற்றிப் பொட்டை கைகளின் மீது அழுத்தி வைக்க வேண்டும்.

கால்களை மூன்றடி இடைவெளியில் விலக்கி வைக்க வேண்டும். கண்கள் மூடியிருக்கவேண்டும். இந்த நிலையில் முப்பது விநாடிகள் முதல் அறுபது விநாடிகள் இருக்கலாம்.

பின்பு கால்களை ஒன்று சேர்த்து, கைகளை நீட்ட வேண்டும். வலது அல்லது இடது புறமாக புரண்டு ஒருக்களித்து எழுந்து அமர வேண்டும். இந்த ஆசனத்தை காலை, மதியம், மாலை மூன்று வேளைகள் செய்யலாம். மிக நல்ல பலன் கிடைக்கும்.

Tags:    

Similar News