உள்ளூர் செய்திகள்
ரெயில் நிலையம்

பொங்கல் கொண்டாட்டம்: கோவை கடைவீதியில் அலைமோதிய கூட்டம்

Published On 2022-01-13 09:18 GMT   |   Update On 2022-01-13 09:18 GMT
பொங்கல் பொருட்கள் வாங்க கடை வீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
கோவை:

பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படு வதையொட்டி கடை வீதி களில் பொருட்களை வாங்கு வதற்காக மக்கள் நேற்று பெருமளவில் திரண்டனர்.பொங்கல் பண்டிகையை யொட்டி தேவைப்படும் பொருட்களான கரும்பு, மஞ்சள் குலை, பச்சரிசி, வெல்லம், தோரணங்கள், பூ உள்ளிட்ட பொருட்களை வாங்க கோவை  மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலையில் அதிகளவில் கூட்டம் காணப்பட்டது. மிகுந்த உற்சாகத்தோடு பொதுமக்கள் கடை வீதிகளில் திரண்டு பொருட்களை வாங்கி சென்றனர்.

இதன் காரணமாக கோவை பெரிய கடை வீதி, ஒப்பணக்கார வீதி, காந்திபுரம் 100 அடி ரோடு, கிராஸ்கட் ரோடு, ஆர்.எஸ்.புரம் பூ மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சாலை ஓரங்களில் பெண்கள் பலர் கடைகளை அமைத்து பொங்கல் பொருட்களை விற்பனை செய்தனர்.மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட் ஆகியவற்றிலும் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் திரண்டனர். இதன் காரணமாக கடைகளில் கூட்டம் அலைமோதியது.

இதையொட்டி கடை வீதிகள் அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போலீசார் ஒலிபெருக்கி மூலமாக பொதுமக்களை உஷார்படுத்திக் கொண்டே இருந்தனர்.தங்களது பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறும், குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறும் கூறிக் கொண்டே இருந்தனர்.

பழக்கடைகளிலும் பழங்களை வாங்குவதற்கு கூட்டம் அதிகமாக காணப் பட்டது. இதேபோன்று காய்கறி கடைகளிலும் மக்கள் திரண்டு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.அதே போன்று ஜவுளி கடைகளில் புத்தாடைகளை எடுப்பதற்கும் மக்கள் கூடினார்கள்.

ஒப்பணக்கார வீதியில்  நேற்று வழக்கம் போல மக்கள் அதிகளவில் திரண்டனர். ஞாயிற்றுக் கிழமைகளில் கூடுவது போன்று ஆயிரக்கணக்கான மக்கள்  புத்தாடை மற்றும் பொருட்களை வாங்கினர்.இதேபோல இன்று காலை ஆர்.எஸ்.புரம் பூ மார்க்கெட்டில் கரும்பு, மஞ்சள் குலை, ஓலை தோரணங்கள், பொங்கல் பானை, பொங்கல் பூ உள்ளிட்ட பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.  

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் மனநிலையில் மக்கள் கொரோனாவை முற்றிலுமாக மறந்து இருந்ததை  காண முடிந்தது.இன்று மாலையிலும் கடை வீதிகளில் அதிக கூட்டம் காணப்படும் என்ப தால் போலீசார் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக் கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News