செய்திகள்
பாராளுமன்றம்

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29ல் தொடங்குகிறது- அமைச்சரவை குழு பரிந்துரை

Published On 2021-11-08 11:07 GMT   |   Update On 2021-11-08 15:58 GMT
குளிர்கால கூட்டத்தொடரை நவம்பர் 29ம் தேதி முதல் டிசம்பர் 23ம் தேதி வரை நடத்த அமைச்சரவை குழு பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி:

கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக கடந்த ஆண்டு பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படவில்லை. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் மழைக்கால கூட்டத்தொடர் நடத்தப்பட்டன. எனினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கூட்டத்தொடரின் நாட்கள் குறைக்கப்பட்டன. 
 
இந்த ஆண்டுக்கான குளிர்கால கூட்டத்தொடரை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பாராளுமன்ற குளிர்கால  கூட்டத்தொடரை நவம்பர் 29ம் தேதி முதல் டிசம்பர் 23ம் தேதி வரை நடத்த பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 20 அமர்வுகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டும் ஒரே நேரத்தில் செயல்படும்போது, உறுப்பினர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News