லைஃப்ஸ்டைல்
கல்லீரல்

கல்லீரல் கெடுவதற்கான காரணங்கள்

Published On 2020-01-15 04:10 GMT   |   Update On 2020-01-15 04:10 GMT
கல்லீரல் ஒழுங்காக வேலை செய்யாவிட்டால் பசியின்மை, மலச்சிக்கல், வாந்தி ஏற்படும். காய்ச்சல் வரும். வயிற்றின் மேல் பகுதி வீங்கும், வலியும் இருக்கும்.
மனித உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் ஓவ்வொரு அற்புதமான வேலைகளைச் செய்து வருகின்றது. அந்த வகையில் நம் உடம்பிலுள்ள லிவர் மிக முக்கியமான உறுப்பாகும். மனித உடலில் மாற்று இருதயம், கிட்னி வைப்பது போல் மாற்று கல்லீரல் (லிவர்) என்று மாற்ற முடியாது. எத்தனை மனிதர்களுக்கு இந்த லிவர் என்ன, என்ன வேலைகளைச் செய்கின்றது என்பது தெரியுமா?

லிவரின் அற்புத வேலைகள்

இதன் எடை சுமார் 2 கிலோ கிராமாக உள்ளது. இது நமது உடலில் வயிற்றின் வலது புறத்தின் கீழ் அமைந்திருக்கின்றது. கருஞ்சிவப்பு நிறமாகும். இரண்டு மடல் களாக இருக்கும். வலது மடல், இடது மடலைவிட ஆறு மடங்கு பெரியாதாகும். பொதுவாக லிவர் தினசரி 20 அவுன்ஸ் பித்த நீரை சுரக்கின்றது. உணவுச் சத்துக்களை கிளை கோஜனாக சேமித்து வைப்பது லிவர் தான். கிளைகோஜனை சர்க்கரையாக மாற்றுவது லிவர். நம் உடம்பில் தேய்ந்து போன இரத்த அணுக்களை அழிப்பதும் லிவர் தான்.

லிவரின் உட்புறத்தில் பித்த நீரை சேமித்து வைப்பதற்காக ஒரு சிறு பை பேரிக்காய் வடிவத்தில் உள்ளது. இதனை கால்பிளாடர் என அழைப்பர். இதில் தான் கொலஸ்டிரால் என்ற கொழுப்பு பொருள் உள்ளது. மனிதர்களுக்கு பித்தக்கற்கள் உடலில் உண்டாகும். இந்த பித்தக் கற்கள் பித்தப்பையில் இருக்கும் வரை பிரச்சினை இருக்காது. அவை பித்தநீர் நாளத்தில் பிரவேசித்து பித்தநீர் ஓட்டத்தை தடுக்கும் போது வலி ஏற்படும். மேலும் மஞ்சள் காமாலை வியாதியும் ஏற்படும்.

லிவர் ஒழுங்காக வேலை செய்யாவிட்டால் பசியின்மை, மலச்சிக்கல், வாந்தி ஏற்படும். காய்ச்சல் வரும். வயிற்றின் மேல் பகுதி வீங்கும், வலியும் இருக்கும். மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறும். லிவரால் கிரகிக்கப்படுகின்ற ரசாயன நச்சுப் பொருட்கள் பித்தப்பையில் அடைக்கப்படுகின்றது. அவை நமது உடலில் கலந்து விடாமல் பாதுகாக்கப்படுகின்றது. லிவர் ஒழுங்காக வேலை செய்ய வில்லையெனில் உடலிலுள்ள ரசாயன நச்சுப்பொருட்கள் இரத்தத்துடன் கலக்கும் அபாயம் ஏற்படும். கல்லீரலின் (லிவர்) துணையோடு தான், பித்தப்பையில் சேர்ந்த ரசாயன நச்சுப் பொருட்களை அழித்து விடுகின்றது. மோசமான நச்சுப் பொருட்களை கற்களாக மாற்றி உள் ளேயே வைக்கின்றது.

இவ்வளவு அற்புத வேலைகளை அமைதியாகச் செய்து கொண்டிருக்கும் லிவர் பற்றி ஒவ்வொரு மனிதனும் அறிய வேண்டும். அதோடு மட்டுமல்ல அது சிறப்பாக இயங்க நம் சித்தர்கள் அருளிய யோக நெறிமுறைகளையும் கடைபிடித்தால் லிவர் மிகச் சிறப்பாக இயங்கும். அதனால் உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் மிகச்சிறப்பாக இயங்கும்.

லிவர் கெடுவதற்கு காரணங்கள்

பசித்து புசித்தால் உடலில் எல்லா உறுப்புமே நன்றாக இயங்கும். குறிப்பாக பசிக்காமல் ருசிக்காக மூன்று வேளை உணவு உண்பது என்று பசியில்லாமல் உண்பது, அதுவும் அளவுக்கு அதிகமாக உண்பதால் லிவர் தனது செயல் திறனை விரைவில் இழக்கின்றது. மது அருந்துவதாலும், மற்ற போதைப் பொருட்களை உட்கொள்வதாலும் லிவர் தனது செயல் திறனை இழக்கின்றது. அடிக்கடி உணவில் புரோட்டா, போன்ற மைதா மாவினால் ஆன உணவுகளை ஹோட்டலில் உட்கொள்வதாலும் லிவர் செயல் திறனை இழக்கின்றது. அதிக உடலுழைப்பு, ஓய்வே இல்லாமல் இரவில் விழித்து வேலை செய்வதாலும் லிவர் தன் செயல் திறனை இழக்கின்றது.
Tags:    

Similar News