உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை

Published On 2022-04-15 11:10 GMT   |   Update On 2022-04-15 11:10 GMT
இந்த இரு சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொள்ளாச்சி: 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கரியன் செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம். இவரது மகள் அபிநந்தினி (வயத 21). 
 
இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. கணிதம் படித்து வந்தார். சிறு வயதில் இருந்தே அபிநந்தினி பிடிவாத குணம் கொண்டவர்.

இந்தநிலையில் அவரிடம் அவரது பெற்றோர் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்குமாறு கூறினர். ஆனால் இதனை ஏற்க மறுத்த அபிநந்தினி தான் எழுதினால் குரூப்-1 தேர்வு தான் எழுதுவேன் என கூறினார். இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து அபிநந்தினி தனது பெற்றோரிடம் கோபித்துக்-கொண்டு வெளியே சென்--றார். 

இதன் காரணமாக வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் விஷத்தை கரைத்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அவரது பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவருக்கு முதலு-தவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அபிநந்தினியை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார். 

இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி மாநிலம் பிள்ளைசாவடியை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மகள் ஜீவிதா (வயது 19). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. அழகுகலை முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர் சாய்பாபா காலனி ஜவகர் நகரில் தோழிகளுடன் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

ஜீவிதா தனது சொந்த ஊருக்கு சென்று விட்டு கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோவைக்கு திரும்பினார். பின்னர் தோழிகளுடன் சேர்ந்து கல்லூரிக்கு சென்று வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது பெற்றோரை தொடர்பு கொண்ட ஜீவிதா இந்த கல்லூரியில் படிக்க விருப்பம் இல்லை என்றும், சொந்த ஊரில் படிக்க விரும்புவதாக கூறினார். எனவே அங்கேயே கல்லூரியில் இடம் பெற்று கொடுக்கும்படி தனது பெற்றோரிடம் கூறினார். 

இதனையடுத்து அவருக்கு அவரது பெற்றோர் புதுச்சேரியில் உள்ள கல்லூரியில் படிப்பதற்கு ஏற்பாடுகள் செய்தனர். இது குறித்து அவர்கள் தங்கள் மகளிடம் தெரிவித்தனர். ஆனால் ஜீவிதா தான் இங்கேயே படிக்க விரும்புவதாக தெரிவித்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதனையடுதத்து அவரிடம் அவரது பெற்றோர் அறையை காலி செய்து விட்டு தயாராக இருக்கும்படி கூறினார். அதன்படி அவரை அழைத்து செல்வதற்காக வந்தார். பெற்றோர் தன்னை அழைத்து சென்று விடுவார்களோ என்ற பயத்தில் இருந்த ஜீவிதா விஷத்தை குடித்தார். தனது பெற்றோர் வந்ததும் தான் விஷம் குடித்த தகவலை அவர்களிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். 

பின்னர் ஜீவிதாவை சென்னை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஜீவிதா பரிதாபமாக இறந்தார். இது குறித்து சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News