செய்திகள்
நீலகிரி மாவட்டத்தின் புதிய கலெக்டராக எஸ்.பி.அம்ரித் கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்று கொண்டார்

நீலகிரி மாவட்ட புதிய கலெக்டராக எஸ்.பி.அம்ரித் பொறுப்பேற்றார்

Published On 2021-11-26 06:36 GMT   |   Update On 2021-11-26 07:52 GMT
நீலகிரி மாவட்டத்தின் புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள எஸ்.பி. அம்ரித் தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரியை சேர்ந்தவர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்ட கலெக்டராக கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் இன்னசென்ட் திவ்யா பொறுப்பேற்றார். இந்த நிலையில் யானைகள் வழித்தட பிரச்சினை தொடர்பாக இன்னசென்ட் திவ்யாவை பணியிடமாற்றம் செய்ய கூடாது என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்திருந்தது.

இதனால் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக மற்ற மாவட்ட கலெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டபோதும், இவர் நீலகிரி மாவட்ட கலெக்டராகவே தொடர்ந்தார்.



இந்த நிலையில் நீலகிரி கலெக்டரை பணிமாற்றம் செய்ய வேண்டும் என தமிழக அரசு கேட்டதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு அவரை இடமாற்றம் செய்ய அனுமதி கொடுத்தது.

இந்த நிலையில் நகராட்சி நிர்வாக இணை ஆணையராக இருந்த எஸ்.பி.அம்ரித்தை நீலகிரி மாவட்டத்தின் புதிய கலெக்டராக நியமித்து தமிழக அரசு நேற்று அறிவித்தது.

இதையடுத்து அவர் இன்று காலை நீலகிரி வந்தார். பின்னர் ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்ற எஸ்.பி.அம்ரித், கோப்புகளில் கையெழுத்திட்டு நீலகிரி மாவட்டத்தின் புதிய கலெக்டராக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

நீலகிரி மாவட்டத்தின் புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள எஸ்.பி. அம்ரித் தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரியை சேர்ந்தவர். 1988-ம் ஆண்டு பிறந்த இவர் 2013-ம் ஆண்டு
தமிழக அரசு
பணியில் சேர்ந்தார். இவர் தமிழ், இந்தி, ஆங்கிலம் மொழிகளை நன்கு அறிந்தவர். மேலும் இவர் ஏற்கனவே மதுரை மாவட்டத்தின் கூடுதல் கலெக்டராகவும் பணியாற்றியுள்ளார்.


Tags:    

Similar News