செய்திகள்
டிகே சிவக்குமார்

கொரோனா தடுப்பூசி வினியோகத்தில் தெளிவான நிலைப்பாடு இல்லை: டி.கே.சிவக்குமார்

Published On 2021-05-12 02:42 GMT   |   Update On 2021-05-12 02:42 GMT
கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி வினியோகம் செய்வதில் மாநில அரசுக்கு ஒரு தெளிவான நிலைப்பாடு இல்லை என்று டி.கே. சிவக்குமார் கூறினார்.
பெங்களூரு :

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூருவில் கட்டளை மையத்தில் ஆய்வு செய்த பா.ஜனதாவை சேர்ந்த தேஜஸ்வி சூர்யா எம்.பி., அங்கு பணியாற்றியவர்களில் 17 முஸ்லிம்களின் பெயர்களை வாசித்து அவர்கள் படுக்கை ஒதுக்கீடு செய்வதில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக கூறினார்.

ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களின் பெயர்களை மட்டும் அவர் வாசித்துள்ளார். அதிகாரிகள் கொடுத்த பெயர் பட்டியலை தான் வாசித்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தான் செய்த தவறை மூடிமறைக்க அவர் அதிகாரிகள் மீது பழியை போடுகிறார். அதிகாரிகள் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களின் பெயர்களை மட்டும் கொடுக்க மாட்டார்கள். கொரோனா 3-வது அலை குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா எச்சரிக்கை விடுத்துள்ளார். அதற்குரிய முன்னேற்பாடுகளை அவர் செய்து கொள்ள வேண்டும்.

அதற்கு முன்பு அவர் தற்போது கர்நாடகத்தை கடுமையாக தாக்கியுள்ள வைரஸ் பரவலின் 2-வது அலையை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

18 வயது நிரம்பியவர்களுக்கு தடுப்பூசி போடுவதாக முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார். அதற்கு ஆன்லைனில் பதிவு செய்ய முயற்சி செய்தால், அது சாத்தியமாகவில்லை. தடுப்பூசி வினியோகம் செய்வதில் இந்த அரசுக்கு ஒரு தெளிவான நிலைப்பாடு இல்லை. தடுப்பூசி போதிய இருப்பு இல்லாதபோது, எப்படி அனைவருக்கும் சரியான நேரத்தில் தடுப்பூசி வழங்க முடியும்.

சிவமொக்காவில் ஒரு மந்திரி (ஈசுவரப்பா) மக்களுக்கு நிவாரணம் கொடுக்க எங்களிடம் பணம் அச்சிடும் எந்திரம் இல்லை என்று கூறியுள்ளார். அண்டை மாநிலங்களில் மக்களுக்கு அங்குள்ள அரசுகள் நிவாரணம் கொடுக்கின்றன.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், நிவாரண உதவிகளை பொதுமக்கள் கேட்கிறார்கள். வேலை இழந்தவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். ஊரடங்கால் விளைபொருட்களை விற்க முடியாமல் விவசாயிகள் கஷ்டத்தில் சிக்கியுள்ளனர்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Tags:    

Similar News