செய்திகள்
லடாக் எம்.பி. ஜம்யங் செரிங் நாம்க்யால்

லடாக் எம்.பி. ஜம்யங் செரிங் நாம்க்யாலுக்கு கொரோனா

Published On 2020-09-15 22:36 GMT   |   Update On 2020-09-15 22:36 GMT
லடாக் எம்.பி. ஜம்யங் செரிங் நம்க்யாலுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
லடாக்:

லடாக் யூனியன் பிரதேசத்தின் மக்களவை உறுப்பினராக உள்ளவர் ஜம்யங் செரிங் நாம்க்யால். பாஜகவை சேர்ந்த இவர் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதற்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் குரல் எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் அவர் பேசிய கருத்துக்களால் நாடுமுழுவதும் ஜம்யங் செரிங் நாம்க்யால் மிகவும் பிரபலமானார். தற்போது லடாக் யூனியன் பிரதேசத்தின் பாஜக கட்சித்தலைவராகவும் ஜம்யங் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், எம்.பி. ஜம்யங் செரிங் நாம்க்யாலுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தன்னைத்தானே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொண்டுள்ளார்.

மேலும், கடந்த சில நாட்களாக தன்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை தாங்களாகவே தனிமைப்படுத்திக்கொள்ளவும் ஜம்யங் அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள எம்.பி. ஜம்யங் செரிங் நாம்க்யால் கடந்த ஞாயிற்றுக்கிழமை மத்திய மந்திரி கிரின் ரிஜிஜூவை நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.     

Tags:    

Similar News