ஆன்மிகம்
திருச்சானூர் பத்மாவதி தாயார்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலிலும் ஆன்லைனில் கல்யாண உற்சவம்

Published On 2021-02-03 09:02 GMT   |   Update On 2021-02-03 09:02 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடப்பதுபோல் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலிலும் ஆன்லைனில் கல்யாண உற்சவத்தை நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
திருப்பதி :

திருப்பதியில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளின்படி பல்வேறு ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்தது. எனினும் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று ஆன்லைன் மூலம் கல்யாண உற்சவத்தை நடத்தி வருகிறது.

இதற்கு பக்தர்கள் ரூ.1000 கட்டணம் செலுத்தி தங்கள் கோத்திரம், பெயர், நட்சத்திரம் உள்ளிட்டவற்றுடன் முன்பதிவு செய்து கொண்டால் அவர்களின் பெயரில் சங்கல்பம் செய்து அர்ச்சகர்கள் கல்யாண உற்சவத்தை நடத்துவர்.

பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் தங்கள் வீடுகளிலிருந்து தேவஸ்தான பக்தி டி.வி. (எஸ்விபிசி சேனல்) வாயிலாக கலந்து கொள்ளலாம். இந்த டிக்கெட்டை முன்பதிவு செய்தவர்களுக்கு 90 நாட்களுக்குள் ரூ.300 கட்டண டிக்கெட் தரிசனத்தை தேவஸ்தானம் இலவசமாக வழங்கி வருகிறது. இதில் நேரடியாக பங்கேற்று பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலிலும் ஆன்லைன் கல்யாண உற்சவத்தை நடத்த தேவஸ்தானம் திட்டமிட்டு வருகிறது. ரூ.500 செலுத்தி ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே இதில் கலந்து கொள்ளலாம்.

பின்னர் அவர்களுக்கு 90 நாட்களுக்குள் தாயாரின் தரிசனம் இலவசமாக வழங்கப்படும். தரிசனம் முடித்த பின்னர் பக்தர்களுக்கு ஒரு உத்தரியம், ஒரு ரவிக்கைத்துண்டு, அட்சதை அளிக்கப்படுகிறது.இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது.
Tags:    

Similar News