வழிபாடு
சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு

சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு

Published On 2022-01-01 05:43 GMT   |   Update On 2022-01-01 05:43 GMT
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள பேச்சியம்மன் கோவில் அருகே உள்ள வழுக்குப் பாறையில் தண்ணீர் வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் நீராடினர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல அதிகாலையிலேயே தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு திரளான பக்தர்கள் வந்தனர். காலை 6.30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டது.

பின்னர் பக்தர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை, கிருமிநாசினி மூலம் கை கழுவுதல் உள்ளிட்ட பரிசோதனைகளுக்கு பின்பு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சாமி தரிசனம் செய்ய சென்றனர். வனத்துறையினர் பக்தர்களிடம் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளை கைப்பற்றினர். பின்னர் அதற்கு பதிலாக பக்தர்கள் உடமைகளை கோவிலுக்கு கொண்டு செல்ல துணிப்பைகளை வழங்கினர்.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள பேச்சியம்மன் கோவில் அருகே உள்ள வழுக்குப் பாறையில் தண்ணீர் வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் நீராடினர். சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி, சந்தன மகாலிங்கம் சுவாமிகளுக்கு பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.
Tags:    

Similar News