லைஃப்ஸ்டைல்
பாலை எப்படி குடிக்க வேண்டும்?

பாலை எப்படி குடிக்க வேண்டும்?

Published On 2019-10-03 07:37 GMT   |   Update On 2019-10-03 07:37 GMT
தினமும் பால் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் பாலை எந்த முறையில் குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று அறிந்து கொள்ளலாம்.
பாலை பகலிலும் அருந்தலாம், இரவிலும் அருந்தலாம், ஆனால் உணவு உண்ட பிறகுதான் குடிக்க வேண்டும்.

பாலைக் குடிக்கும்போது அமைதியாகவும் சிறுகச் சிறுகச் சுவைத்து குடிக்க வேண்டும். அதுவே உடலுக்கு நல்லது. அவ்வாறின்றி மளமளவென குடிப்பது மற்றும் பெரும் அளவில் விழுங்குவது ஆகியவற்றால் வயிற்றில் செரிப்பதில் பிரச்சினை ஏற்படும்.

பாலுடன் சர்க்கரையைச் சேர்த்துக் குடிப்பதால், சர்க்கரை பாலின் தன்மையைக் கெடுத்து, அதை இரைப்பையில் புளிக்கும்படியும் வாய்வு உண்டாகும்படியும் செய்கிறது. அதனால் சர்க்கரை சேர்க்காமலே குடிப்பது நல்லது.

களைப்பு, மயக்கம், சுவாச காசம், அதிக தாகம், பசி, இரத்தக் குறைவு இவற்றையெல்லாம் பசும்பால் எளிதில் குணப்படுத்தும்.

பாலில் 101 வகை நன்மை தரக்கூடிய பொருட்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பாலில் புரோட்டின் அதிகமாக உள்ளது. இது உடலின் திசு உற்பத்திக்கும்.
Tags:    

Similar News