தொழில்நுட்பம்
சாம்சங்

அமேசானில் வெளியாகும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7

Published On 2020-08-19 06:14 GMT   |   Update On 2020-08-19 06:14 GMT
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ்7 விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சாம்சங் நிறுவனம் விரைவில் தனது கேலக்ஸி டேப் எஸ்7 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிகிறது. இந்திய வெளியீட்டை உணர்த்தும் டீசர்கள் அமேசான் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன. முன்னதாக கேலக்ஸி டேப் எஸ்7 மாடல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற்ற கேலக்ஸி அன்பேக்டு விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய சாம்சங் டேப்லெட் மாடலின் சரியான வெளியீட்டு தேதி அமேசானில் தற்சமயம் குறிப்பிடப்படவில்லை. எனினும், புதிய சாதனத்திற்கான நோட்டிஃபை மி பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த டேப்லெட் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 மாடலில் 11 இன்ச் WQXGA எல்டிபிஎஸ் டிஎஃப்டி டிஸ்ப்ளே, ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி வைடு ஆங்கில் லென்ஸ், 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 

இத்துடன் 4ஜி (ஆப்ஷனல்), வைபை 6, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி போர்ட், 8000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் இதன் விலை 699 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ. 62,200) துவங்கி டாப் எண்ட் மாடல் விலை 879 யூரோக்கள், (இந்திய மதிப்பில் ரூ. 78,200) என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. 
Tags:    

Similar News