சமையல்
கேழ்வரகு மில்க் ஷேக்

நார்ச்சத்து அதிகம் உள்ள கேழ்வரகு மில்க் ஷேக்

Published On 2022-04-09 05:28 GMT   |   Update On 2022-04-09 05:28 GMT
கேழ்வரகில் கால்சியம் சக்தி அதிகம் உள்ளது. வாரம் ஒரு முறை அல்லது இருமுறை கேழ்வரகு உணவுகளை சாப்பிட்டு வருவது, பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்
 
கேழ்வரகு - 50 கிராம்
பாதாம், முந்திரி, திராட்சை (ஊற வைத்தது) - தலா 4
பேரீச்சை - 5
காய்ச்சியப் பால் - 200 மி.கி
ஏலப்பொடி - 1 தேக்கரண்டி
சர்க்கரை - சுவைக்கேற்ப

செய்முறை:

முதல்நாள் இரவு ஊற வைத்த கேழ்வரகை நீர் விட்டு அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். சக்கையை மீண்டும் சிறிது நீர் விட்டு அரைத்து வடிக்கட்டவும்.

ஊற வைத்து தோல் நீக்கிய பாதாம், முந்திரி, திராட்சை, பேரீச்சையை சிறிது பால் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

இரண்டு கேழ்வரகு பாலையும் ஒன்றாக சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் காய்ச்சவும்.

அத்துடன் அரைத்த பாதாம் விழுது, மீதம் உள்ள பால், ஏலப்பொடி சேர்த்து மேலும் சிறிது நேரம் காய்ச்சி இறக்கவும்.

சத்தான கேழ்வரகு மில்க் ஷேக் தயார்.

(விருப்பப்பட்டால் பிரிட்ஜில் வைத்து குளிர வைத்தும் அருந்தலாம்)
Tags:    

Similar News