ஆன்மிகம்
திருப்பதியில் கோதண்டராமசாமி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

திருப்பதியில் கோதண்டராமசாமி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

Published On 2021-03-12 09:09 GMT   |   Update On 2021-03-12 09:09 GMT
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் நாளை (சனிக்கிழமை) முதல் 21-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா ஏகாந்தமாக நடக்கிறது. அதையொட்டி ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது.
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் நாளை (சனிக்கிழமை) முதல் 21-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா ஏகாந்தமாக நடக்கிறது. அதையொட்டி நேற்று  ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது. அதிகாலை மூலவரை துயில் எழுப்பி தோமலா சேவா, சகஸ்ர நாமார்ச்சனை நடந்தது. அதைத்தொடர்ந்து காலை 6.30 மணியில் இருந்து காலை 9 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது. கோவிலின் மூலவர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, தூண்கள், பூஜைகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகியவை தூய நீரால் சுத்தம் செய்யப்பட்டது.

இதையடுத்து நமகொம்பு, ஸ்ரீ சூரணம், கஸ்தூரி மஞ்சள், மஞ்சள், கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமப்பூ, கிச்சிலி கட்டா ஆகிய சுகந்த திரவியங்களுடன் கலந்த புனித நீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது. காலை 10 மணியில் இருந்து இலவச தரிசனத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தில் சிறப்பு நிலை துணை அதிகாரி பார்வதி, உதவி அதிகாரி துர்காராஜு, கண்காணிப்பாளர் ஜி.ரமேஷ், கோவில் ஆய்வாளர்கள் முனிரத்னம், ஜெயக்குமார் மற்றும் ஊழியர்கள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News