தொழில்நுட்பம்
சியோமி Mi 10

சியோமி Mi 10 இந்திய வெளியீடு ஒத்திவைப்பு

Published On 2020-03-26 05:09 GMT   |   Update On 2020-03-26 05:09 GMT
சியோமி நிறுவனத்தின் Mi 10 ஸ்மார்ட்போன் இந்திய வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.



சியோமி நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் Mi 10 ஸ்மார்ட்போன் இந்தியாவில் மார்ச் 31-ம் தேதி அறிமுகம் செய்ய இருந்தது. முன்னதாக Mi 10 ஸ்மார்ட்போன் சீரிஸ் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. 

தற்சமயம் நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக Mi 10 சீரிஸ் வெளியீடு தள்ளி வைக்கப்படுவதாக சியோமி நிறுவன இந்திய தலைவர் மனு குமார் ஜெயின் அறிவித்து இருக்கிறார். புதிய அறிவிப்பை அவர் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.




இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் Mi 10 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சமாக 108 எம்.பி. கேமரா இருக்கிறது. இதுதவிர Mi 10 ஸ்மார்ட்போனில் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்திய வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு இருக்கும் நிலையில், சர்வதேச சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் மார்ச் 27-ம் தேதி அறிமுகமாக இருக்கிறது.
 
முன்னதாக ரியல்மி மற்றும் விவோ போன்ற நிறுவனங்களும் தங்களது ஸ்மார்ட்போன் அறிமுக நிகழ்வுகளை ஒத்திவைப்பதாக அறிவித்தன. இதுதவிர பல்வேறு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களது நிகழ்வுகளை ரத்து செய்தும், ஒத்திவைப்பதாக அறிவித்து வருகின்றன.
Tags:    

Similar News