செய்திகள்
கோப்புபடம்

உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் தொடக்கம்

Published On 2021-10-08 08:20 GMT   |   Update On 2021-10-08 08:20 GMT
இந்திய பிரதமரின் பி.எம் கேர் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் பிராண வாயு உற்பத்தி மையம் படிப்படியாக தொடங்கப்பட்டு வருகிறது.
உடுமலை:

கொரோனா 2-வது அலை தாக்கத்தின் போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழந்தனர். அப்போதுதான் தூய்மையான காற்றின் அவசியம் மற்றும் மகத்துவத்தையும் அனைவரும் உணர்ந்தனர்.

அதைத் தொடர்ந்து இந்திய பிரதமரின் பி.எம் கேர் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் பிராண வாயு உற்பத்தி மையம் படிப்படியாக தொடங்கப்பட்டு வருகிறது.

அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து எந்திரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவுற்ற நிலையில் பிராணவாயு உற்பத்தி மையம் செயல்பாட்டுக்கு வந்தது. 

இந்த எந்திரம் காற்றில் இருந்து ஆக்சிஜனை தனியாக பிரித்துக் கொடுக்கும் தன்மையுடையது. இதன் மூலம் ஒரு நிமிடத்திற்கு 500 லிட்டர் வீதம் நாள் ஒன்றுக்கு 60 நபர்களுக்கு பிராணவாயு அளிக்க முடியும். நிகழ்ச்சிக்கு ஆர்.டி.ஓ கீதா தலைமை தாங்கினார்.

தலைமை மருத்துவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். இதில் தாசில்தார் ராமலிங்கம்,டாக்டர் வனஜா, சித்தா டாக்டர் லட்சுமிபதி உள்ளிட்ட வருவாய், சுகாதாரத்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News