லைஃப்ஸ்டைல்
சாக்லேட்: அளவோடு சாப்பிட்டால் ஆரோக்கியம்

சாக்லேட்: அளவோடு சாப்பிட்டால் ஆரோக்கியம்

Published On 2021-08-17 06:24 GMT   |   Update On 2021-08-17 06:24 GMT
டார்க் சாக்லேட் சாப்பிடுவது இதய நோய் மற்றும் பக்கவாதம் சார்ந்த ஆபத்துக்களை குறைக்க உதவும். உயர் ரத்த அழுத்தத்தையும் குறைக்க வழிவகுக்கும்.
தரமான சாக்லேட்டை அளவோடு சாப்பிட்டால் நான்கு விதமான நன்மைகள் கிடைக்கும். அதன் விவரம்:

1. மனநிலை மேம்படும்: சாக்லேட்டுகளில் பினைல் லேத்லமைன் எனும் வேதிப்பொருள் உள்ளது. இது அன்பை அதிகரிக்க செய்யும் தன்மை கொண்டது. அதுபோல் ஆனந்தமைடு எனும் பொருள் மகிழ்ச்சியை தூண்டக்கூடியது. சாக்லேட் தயாரிக்க பயன்படுத்தப்படும் கொக்கோவில் உள்ள பாலிபினால்கள் மன அழுத்தத்தை குறைக்க உதவும். டார்க் சாக்லேட் மற்றும் மில்க் சாக்லேட் ஆகிய இரண்டிலும் பாலிபினால்கள் உள்ளன. மேலும் மற்ற சாக்லேட்களை விட டார்க் சாக்லேட்களில் பிளவனாய்டுகள் அதிகம் உள்ளன. அவையும் மன அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்டவை.

2. மூளைக்கு நன்மை: சாக்லேட்டில் இருக்கும் பிளவனாய்டு மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகின்றன. மூளையில் உள்ள நியூரான்களை பாதுகாக்கவும், நினைவகம் மற்றும் கற்றல் தொடர்பான அறிவாற்றல் திறன்களை அதிகரிக்கவும் துணைபுரிகின்றன. முதியவர்கள் சாக்லேட் சாப்பிட்டால் அல்சைமர் நோய் வருவதற்கான வாய்ப்புகளும் குறையும்.

3. இதயம்: டார்க் சாக்லேட் சாப்பிடுவது இதய நோய் மற்றும் பக்கவாதம் சார்ந்த ஆபத்துக்களை குறைக்க உதவும். உயர் ரத்த அழுத்தத்தையும் குறைக்க வழிவகுக்கும். டார்க் சாக்லேட் ரத்த நாளங்கள் விரிவடையவும் துணைபுரியும். ரத்த ஓட்டம் சீராக நடைபெறுவதற்கும் வாய்ப்பு ஏற்படும்.

4. சிறுநீரகம்: டார்க் சாக்லேட் சிறுநீரகங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கூடியது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
Tags:    

Similar News