செய்திகள்
கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம்

ஜெயங்கொண்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம்

Published On 2021-07-15 10:51 GMT   |   Update On 2021-07-15 10:51 GMT
கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத 9 வணிக நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.4,500-ம், முககவசம் அணியாத 4 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் சுபாஷினி உத்தரவின்பேரில், சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் கடைவீதிகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத 9 வணிக நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.4,500-ம், முககவசம் அணியாத 4 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. அப்போது அவர்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் கடை ஊழியர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கொரோனா மூன்றாம் அலை பரவாமல் தடுக்க தமிழக அரசு கூறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆய்வின்போது நகராட்சி வருவாய் உதவி ஆய்வாளர் சரஸ்வதி மற்றும் பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News