வழிபாடு
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஏர

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்

Published On 2021-12-27 04:40 GMT   |   Update On 2021-12-27 04:40 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள், முருக பக்தர்கள் வருவார்கள்.

தற்போது மார்கழி மாதம் என்பதால் தினமும் கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு வருகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனையும், மற்ற கால பூஜைகளும் நடைபெற்று வருகிறது.

தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 நாட்களைவிட நேற்று திருச்செந்தூர் கோவிலில் வழக்கத்தைவிட ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். அதாவது பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். ரூ.250, ரூ.100, ரூ.20 போன்ற கட்டண தரிசனம் மற்றும் இலவச பொது தரிசனம் என அனைத்து வரிசையிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

லும் கோவில் கலையரங்கம் அருகே, நாழிக்கிணறு அருகே உள்ள வாகன நிறுத்தும் இடங்கள் கார், வேன்களால் நிரம்பி காணப்பட்டது. எனினும் தொடர்ந்து வாகனங்கள் வந்து கொண்டு இருந்ததால் சாலை இருபுறமும் வரிசையாக வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

இதனால் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருச்செந்தூர் போக்குவரத்து போலீசார், போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News