செய்திகள்
கோப்புபடம்

ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகம் - வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

Published On 2021-11-26 07:10 GMT   |   Update On 2021-11-26 07:10 GMT
ஒரே வாகனம் பல இடங்களில் நிற்பதால் சரக்கு சென்று சேர காலதாமதம் ஏற்படுகிறது.
திருப்பூர்:

ஒருங்கிணைந்த வணிக வரி அலுவலகம் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூர் வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு நிர்வாகிகள், முதல்வர்  மு.க.ஸ்டாலினிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

திருப்பூர் வணிகவரி அலுவலகங்கள் பல இடங்களில் வாடகை கட்டிடங்களில் இயங்குகின்றன. குமார் நகரில் இணை இயக்குனர் அலுவலகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகம் அமைக்க வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரியில் வணிகர்கள் தாமதமாக மாதாந்திர நமூனாவை தாக்கல் செய்யும் போது தாமத கட்டணமாக ரூ.150 வீதம் விதிக்கப்படுகிறது. 

செலவு அதிகரிப்பதால் நிரந்தரமான அபராத கட்டணமாக மாதம் ரூ.500 ரூபாய் நிர்ணயிக்க வேண்டும். தாமதமான நமூனா தாக்கல் செய்யும் போது உள்ளீட்டு வரவு வரி போக மீதியுள்ள வரியை ரொக்க பதிவேட்டில் செலுத்தும் போது 18 மற்றும் 24 சதவீதம் வட்டி என்பதை 8 மற்றும் 12 சதவீதமாக மாற்ற வேண்டும்.

சரக்கு வாகனங்களை வணிகவரித்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். ஒரே வாகனம் பல இடங்களில் நிற்பதால் சரக்கு சென்று சேர காலதாமதம் ஏற்படுகிறது. சரக்குகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கும் வகையில் 24 மணி நேர சேவை பிரிவு தொடங்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தனர். 
Tags:    

Similar News