செய்திகள்
விளவங்கோடு வேட்பாளர் ஜெயசீலனுக்கு ஆதரவாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பிரசாரம்

பிரசாரம் ஓய்கிறது... இன்று இரவு 7 மணிக்கு பிறகு வெளிநபர்கள் வெளியேற உத்தரவு

Published On 2021-04-04 08:18 GMT   |   Update On 2021-04-04 08:18 GMT
தேர்தல் பிரசாரத்துக்காக அனைத்து தொகுதிகளிலும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வெளியூர்களில் இருந்து வந்து தங்கியுள்ளனர். இவர்கள் தங்களது கட்சி வேட்பாளர்களுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னை:

சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இன்று இரவு 7 மணியுடன் முடிவடைவதை தொடர்ந்து தேர்தல் ஆணையம் கூடுதல் கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது.

தேர்தல் பிரசாரத்துக்காக அனைத்து தொகுதிகளிலும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வெளியூர்களில் இருந்து வந்து தங்கியுள்ளனர். இவர்கள் தங்களது கட்சி வேட்பாளர்களுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது தவிர வேட்பாளர்களுக்காக தேர்தல் பணிகளையும் அவர்கள் மேற்கொண்டு வந்தனர்.

இதுபோன்று தொகுதியில் தங்கியிருக்கும் வெளிஆட்கள் அனைவரும் இன்று இரவு இறுதி கட்ட பிரசாரம் ஓய்ந்த பின்னர் இரவு 7 மணிக்கு மேல் தங்களுக்கு சம்பந்தமான தொகுதிகளில் தங்கியிருக்க கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனை மீறி தொகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், சமுதாய கூடங்கள், லாட்ஜ்கள் ஆகியவற்றில் யாராவது தங்கியிருந்தால் அவர்களை கண்டுபிடித்து வெளியேற்ற வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இது தொடர்பாக அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து தொகுதிகளிலும் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள் போலீசார் துணையுடன் லாட்ஜ்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தி வெளியாட்கள் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் மற்ற தொகுதிகளில் இருந்து குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கி கொள்லாம் என்றும் ஆனால் அவர்கள் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News