தொழில்நுட்பச் செய்திகள்
ஜியோ நிறுவனம்

ஒரே மாதத்தில் 1.3 கோடி வாடிக்கையாளர்களை இழந்த ஜியோ

Published On 2022-02-17 08:21 GMT   |   Update On 2022-02-17 08:21 GMT
டிசம்பர் மாதத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் 11 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.
ஜியோ நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கிட்டதட்ட 1.3 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக ட்ராய் அமைப்பு அறிவித்துள்ளது.

அதே மாதத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் 11 லட்சம் புதிய வாடிக்கையாளர்களையும், ஏர்டெல் 4 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. வோடஃபோன்- ஐடியா நிறுவனம் கடந்த டிசம்பரில் 16 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை ஏற்றியதே வாடிக்கையாளர் இழப்புக்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறைந்த ஊதியம் வாங்கும் வாடிக்கையாளர்களே பி.எஸ்.என்.எல் நோக்கி தள்ளப்பட்டுள்ளனர்.

சந்தை பங்குகளை பொறுத்தவரை ரிலையன்ஸ் ஜியோ 36 சதவீத பங்குகளை வைத்துள்ளது. ஏர்டெல் 30.81 சதவீத பங்குகளையும், வோடபோன் 23 சதவீத பங்குகளையும், பி.எஸ்.என்.எல் 9.90 சதவீத பங்குகளையும், எம்.டி.என்.எல் 0.28 சதவீத பங்குகளையும் வைத்துள்ளது.

1.3 கோடி வாடிக்கையாளர்களை இழந்தாலும் 36.4 கோடி ஆக்டிவ் வாடிக்கையாளர்களுடன் ஜியோ முதலிடத்தில் தான் உள்ளது. ஏர்டெல் 34.8 கோடி வாடிக்கையாளர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

Tags:    

Similar News