செய்திகள்
கொரோனா வைரஸ்

ஆவடி அருகே 10 மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி

Published On 2021-09-29 09:29 GMT   |   Update On 2021-09-29 09:29 GMT
ஆவடி அருகே 10 மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளதையடுத்து மாணவர்களுடன் நெருக்கமாக அமர்ந்தவர்களுக்கும் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆவடி:

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று குறைந்ததைத் தொடர்ந்து கடந்த 1-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன.

பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் கொரோனா கட்டுபாடுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களது உடல் வெப்ப நிலையும் தினந்தோறும் பரிசோதிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆவடி அருகே உள்ள பாலவேடு ஊராட்சி பள்ளியில் படிக்கும் 10 மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த 10 மாணவர்களையும் ஒரு வாரம் விடுமுறையில் வீட்டில் தனிமைப்படுத்த பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு அறிகுறி உள்ள மாணவர்களுடன் நெருக்கமாக அமர்ந்தவர்களுக்கும் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News