செய்திகள்
கோப்புப்படம்

ஆவடி தொழிற்சாலையில் இருந்து ரூ. 7,523 கோடியில் பீரங்கி வாங்குகிறது பாதுகாப்பு அமைச்சகம்

Published On 2021-09-23 13:10 GMT   |   Update On 2021-09-23 13:10 GMT
மேக் இன் இந்தியாவை ஊக்குவிக்கும் விதமாக பாதுகாப்பு அமைச்சகம் ஆவடி தொழிற்சாலையில் இருந்து 7,523 கோடி ரூபாய்க்கு 118 பீரங்கி டாங்கிகள் வாங்க இருக்கிறது.
இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக மோடி தலைமையிலான மத்திய அரசு மேக் இன் இந்தியா திட்டத்தை உருவாக்கியது. பாதுகாப்பு அமைச்சகம் மேக் இன் இந்தியாவை ஊக்குவிக்கும் விதமாக இந்திய ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் சென்னை அருகே உள்ள ஆவடி கனவாகன தொழிற்சாலையில்  (HVF)  இருந்து 7,523 கோடி ரூபாய்க்கு இந்திய ராணுவத்திற்கு 118 அர்ஜுன் எம்.கே. 1ஏ என்ற பீரங்கி டாங்கிகளை வாங்குவதற்கு ஆர்டர் செய்துள்ளது. இந்தத் தகவலை பாதுகாப்பு அமைச்சகத்தின் முதன்மை செய்தி தொடர்பாளர் பாரத் பூஷண் பாபு தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News