செய்திகள்
அங்கன்வாடி.

மடத்துக்குளத்தில் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2021-09-15 09:52 GMT   |   Update On 2021-09-15 09:52 GMT
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஓய்வூதிய விதிகள்படி குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850ஐ அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
உடுமலை:

மடத்துக்குளம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா தலைமை வகித்தார். 

தலைவர் கண்ணம்மாள், செயலாளர் பொன்னுத்தாய், பொருளாளர் கமலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு பேசினார். மேலும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மின்னல்கொடி, உமாபதி, ஈஸ்வரன், முன்னாள் செயலாளர் மாவளப்பன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஓய்வூதிய விதிகள்படி குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850ஐ அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். குடும்ப நல நிதி ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். மருத்துவப்படி மாதம் ரூ.300 மற்றும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
Tags:    

Similar News