தொழில்நுட்பம்
ஒன்பிளஸ்

ஒன்பிளஸ் 9ஆர்டி வெளியீட்டு விவரம்

Published On 2021-10-08 06:26 GMT   |   Update On 2021-10-08 06:26 GMT
ஒன்பிளஸ் நிறுவனத்தின் 9ஆர்டி ஸ்மார்ட்போன் 50 எம்பி சோனி கேமரா சென்சார் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.


ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 9ஆர்டி ஸ்மார்ட்போனின் வெளியீட்டை புதிய டீசர் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறது. ஒன்பிளஸ் 9ஆர்டி மாடல் சீன சந்தையில் அக்டோபர் 13 ஆம் தேதி அறிமுகமாகிறது. 

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கும் டீசர்களில் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் 50 எம்பி பிரைமரி கேமராவுடன் மூன்று லென்ஸ்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. டீசரை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் ட்விட்டரில் வெளியாகி இருக்கிறது. 



அதன்படி ஒன்பிளஸ் 9ஆர்டி ஸ்மார்ட்போனின் பின்புறம் கிளாஸ் பினிஷ் கொண்டிருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் 9ஆர்டி மாடலில் எப்.ஹெச்.டி. பிளஸ் 120 ஹெர்ட்ஸ் புளூயிட் அமோலெட் டிஸ்ப்ளே, 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 65 வாட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.

முந்தைய தகவல்களின்படி இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. எனினும், தற்போதைய தகவல்களின்படி இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் மற்றும் 12 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News