செய்திகள்
பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு

ஆப்கான் எல்லை அருகே தற்கொலைப்படை தாக்குதல்- 4 பாகிஸ்தான் வீரர்கள் பலி

Published On 2021-09-05 11:20 GMT   |   Update On 2021-09-05 11:20 GMT
குவெட்டாவில் ஹசாரா சமூகத்தினரை குறிவைத்து நீண்ட காலமாக ஐஎஸ் அமைப்பினர் மற்றும் சன்னி போராளி குழுக்கள் தாக்குதல் நடத்துகின்றனர்.
குவெட்டா:

பாகிஸ்தானின் குவெட்டா புறநகர்ப்பகுதியில் துணை ராணுவத்தினரை குறிவைத்து இன்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பைக்கில் வந்த நபர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளான். ஆப்கானிஸ்தான் எல்லை அருகே நடைபெற்ற இந்த தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டனர். 17 வீரர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் 2 பேர் என 19 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

குவெட்டாவில் ஹசாரா இனத்தைச்சேர்ந்த சுமார் 5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இந்த சமூகத்தினரை குறிவைத்து நீண்ட காலமாக ஐஎஸ் அமைப்பினர் மற்றும் சன்னி போராளி குழுக்கள் தாக்குதல் நடத்துகின்றனர். 2013ல் போராளிக் குழு நடத்திய தொடர் குண்டுவெடிப்பில் 200 ஹசாராக்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News