செய்திகள்
தாசில்தார்கள் மாற்றம்

குமரியில் 14 தாசில்தார்கள் அதிரடி மாற்றம்

Published On 2020-10-17 09:51 GMT   |   Update On 2020-10-17 09:51 GMT
குமரி மாவட்டத்தில் 14 தாசில்தார்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவிட்டுள்ளார்.
நாகர்கோவில்:

குமரி மாவட்ட வருவாய் அலகில் பணியாற்றும் 14 தாசில்தார்களை நேற்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே அதிரடியாக மாற்றி உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

நாகர்கோவிலில் உள்ள அகஸ்தீஸ்வரம் தாலுகா தாசில்தாராக பணியாற்றி வரும் அப்துல்லா மன்னான், தோவாளை தாலுகா சமூக பாதுகாப்புத்திட்ட தனி தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். தோவாளை தாலுகா தாசில்தார் ராஜேஸ்வரி நாகர்கோவில் உதவி ஆணையர் (ஆயம்) அலுவலக உசூர் மேலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

இதேபோல் கல்குளம் தாலுகா சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தார் முத்துலெட்சுமி, பத்மநாபபுரம் ஆதிதிராவிடர் நலம் தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். நாகர்கோவில் ஆதிதிராவிடர் நலம் தனி தாசில்தார் இக்னேசியஸ் சேவியர் கல்குளம் சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் பத்மநாபபுரம் கோட்ட ஆய அலுவலர் சஜித், நாகர்கோவில் முத்திரை தனி தாசில்தாராகவும், நாகர்கோவில் உதவி ஆணையர் (ஆயம்) அலுவலக உசூர் மேலாளர் சுசிலா அகஸ்தீஸ்வரம் தாலுகா தாசில்தாராகவும், தோவாளை தாலுகா சமூக பாதுகாப்புத்திட்ட தனி தாசில்தார் திருவாழி நாகர்கோவில் கேபிள் டி.வி. தனி தாசில்தாராகவும், மார்த்தாண்டம் முத்திரை தனி தாசில்தார் இசபெல் வசந்தி ராணி நாகர்கோவில் ஆதிதிராவிடர் நலம் தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

நாகர்கோவில் முத்திரை தனி தாசில்தார் வினோத் மார்த்தாண்டம் முத்திரை தனி தாசில்தாராகவும், நாகர்கோவில் டாஸ்மாக் கிட்டங்கி மேலாளர் தாஸ் பத்மநாபபுரம் கோட்ட ஆய அலுவலராகவும், நாகர்கோவில் கேபிள் டி.வி. தனி தாசில்தார் ராஜேஸ் நாகர்கோவில் டாஸ்மாக் கிட்டங்கி மேலாளராகவும், விளவங்கோடு தாலுகா சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தார் ஷீலா பத்மநாபபுரம் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும், பத்மநாபபுரம் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜுலியன் ஹீவர் தோவாளை தாலுகா தாசில்தாராகவும், பத்மநாபபுரம் ஆதிதிராவிடர் நலம் தனி தாசில்தார் அனில்குமார் விளவங்கோடு சமூக பாதுகாப்புத்திட்ட தனி தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பணி மாற்றம் செய்யப்பட்டுள்ள தாசில்தார்கள் உடனடியாக புதிய பணியிடங்களில் பணியில் சேரவும் கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
Tags:    

Similar News