செய்திகள்
திருப்பதி கோவில் அருகே தீ

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தீ விபத்து

Published On 2019-12-08 12:03 GMT   |   Update On 2019-12-08 12:03 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிக்கும் சமையல் அறையில் இருந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

கொழுந்து விட்டு எரிந்த தீயை பார்த்து பக்தர்கள் பதறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் கோவில் வளாகம் அருகே சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இந்த தீ விபத்தில்  உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
Tags:    

Similar News