செய்திகள்
கரூரில் நுங்கு விற்பனை நடந்தபோது எடுத்த படம்.

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: கரூர் பகுதியில் நுங்கு விற்பனை அமோகம்

Published On 2021-03-30 17:37 GMT   |   Update On 2021-03-30 17:37 GMT
வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் கரூர் பகுதியில் சாலையோரங்களில் நுங்கு விற்பனை அமோகமாக நடக்கிறது.
கரூர்:

கரூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் கரூர் பகுதியில் உள்ள சாலையோரங்களில் நுங்கு விற்பனை அமோகமாக நடக்கிறது.

இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாங்கி செல்கின்றனர். 3 நுங்கு தரத்திற்கு ஏற்றால்போல் ரூ.50, ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து நுங்கு வியாபாரி ஒருவர் கூறியதாவது:- நுங்கு உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை ஏற்படுத்தும் என்பதுடன் தாகத்தையும் தீர்க்கும் என்பதால் பொதுமக்கள் விலையை பொருட்படுத்தாமல் வாங்கி செல்கின்றனர்.

தற்போது பனை மரங்கள் அழிந்து வரும் நிலையில் முன்பு போல் நுங்கு கிடைப்பதில்லை. வெளி மாவட்டங்களில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். இதனால் வண்டி வாடகை, கூலி உள்ளிட்டவற்றால் செலவு தொகை கூடுகிறது.

இதனால் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு நுங்கு விலை அதிகமாக உள்ளது. இருப்பினும் பொதுமக்கள் நுங்கை தேடி வந்து வாங்கி செல்கின்றனர்.
Tags:    

Similar News