செய்திகள்
100 நாள் வேலை திட்டப்பணிகள்.

100 நாள் வேலை திட்டப்பணிகள் ஒலிபெருக்கி மூலம் பிரசாரம்

Published On 2021-09-12 08:25 GMT   |   Update On 2021-09-12 08:25 GMT
தனிநபர் நிலங்களில் மழைநீர் சேகரிப்பு, வட்ட பாத்தி அமைத்துக் கொடுத்ததோடு நிலங்களில் பசுந்தீவனம் பயிரிடவும் வழிவகை செய்து தரப்படுகிறது.
உடுமலை:

உடுமலை அருகே உள்ள கன்னமனைக்கனூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயன் அளிக்கக்கூடிய பணிகளை செய்து முடிப்பது குறித்து ஒலி பெருக்கி மூலம் வீதி வீதியாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிறு குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் தனி நபர் நிலங்களுக்கு வரப்பு அமைத்து வட்டப்பாத்தி அமைத்து கொடுக்கப்படுகிறது.

தனிநபர் நிலங்களில் மழைநீர் சேகரிப்பு, வட்ட பாத்தி அமைத்துக் கொடுத்ததோடு நிலங்களில் பசுந்தீவனம் பயிரிடவும் வழிவகை செய்துதரப்படுகிறது. மீன்வள துறையுடன் இணைந்து  மீன்வள குட்டை அமைத்துக் கொடுக்கப்படுகிறது நிலங்களை சீர்செய்து காய்கறிகள் பயிரிட ஏற்ற வகையில் செடிகளை வளர்ப்பதற்கு குழிகள் எடுத்து தரப்படுகிறது. 

இதுபோன்ற பல்வேறு திட்டங்களை அரசு அறிவித்துள்ளது.
இந்தநிலையில் கண்ணமநாயக்கனூர் ஊராட்சி தலைவர் உபதலைவர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 100 நாள் வேலை உறுதிதிட்டத்தினை பயன்படுத்தி விவசாயிகள் வளம் பெறும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News