செய்திகள்
சென்னை ஐகோர்ட்டு

2021-ம் ஆண்டுக்கான ஐகோர்ட்டு விடுமுறை தினங்கள் அறிவிப்பு

Published On 2020-11-27 23:54 GMT   |   Update On 2020-11-27 23:54 GMT
2021-ம் ஆண்டுக்கான ஐகோர்ட்டு விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை:

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 2021-ம் ஜனவரி 1-ம் தேதியும், ஜனவரி 14-ம் தேதி வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 12 முதல் 15-ம் தேதி வரையிலும், குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26-ம் தேதியும், புனித வெள்ளியை முன்னிட்டு ஏப்ரல் 2-ம் தேதியும், ஏப்ரல் 13-ம் தேதி வரும் தெலுங்கு புத்தாண்டு, ஏப்ரல் 14-ம் தேதி வரும் தமிழ் புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு ஏப்ரல் 12 முதல் 14-ம் தேதி வரையிலும், ரம்ஜானை முன்னிட்டு மே 14-ம் தேதியும், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 21-ம் தேதியும், மொகரத்தை முன்னிட்டு ஆகஸ்டு 20-ம் தேதியும், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஆகஸ்டு 30-ம் தேதியும் விடுமுறை விடப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 10-ம் தேதியும், ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 14-ம் தேதி மற்றும் 15-ம் தேதியும், மிலாது நபியை முன்னிட்டு அக்டோபர் 19-ம் தேதியும், நவம்பர் 4-ம் தேதி வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 3 முதல் 5-ம் தேதி வரையிலும் விடுமுறை விடப்படுகிறது.

இதுதவிர உழவர் திருநாள், மகாவீர் ஜெயந்தி, தொழிலாளர் தினம் (மே 1-ம் தேதி), சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, கிறிஸ்துமஸ் ஆகியவை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றன.

மே 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை கோடை விடுமுறையும், அக்டோபர் 9-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை தசரா பண்டிகை விடுமுறையும், டிசம்பர் 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையும் விடப்படுகிறது.

கீழமை நீதிமன்றங்களுக்கும் இந்த நாட்களில் விடுமுறை விடப்படுகிறது. அதேநேரம், ஜனவரி 23-ம் தேதி, மார்ச் 6-ம் தேதி, ஏப்ரல் 17-ம் தேதி, ஜூன் 5-ம் தேதி, ஜூலை 3-ம் தேதி, ஆகஸ்டு 7-ம் தேதி, செப்டம்பர் 4-ம் தேதி, அக்டோபர் 23-ம் தேதி, நவம்பர் 20-ம் தேதி, டிசம்பர் 4-ம் தேதி ஆகிய தேதிகளில் வரும் 10 சனிக்கிழமைகளில் அனைத்து கீழமை நீதிமன்றங்களும் செயல்படும். இதைதவிர அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள், குடும்பநல நீதிமன்றங்கள் உள்பட அனைத்து நீதிமன்றங்களுக்கும் விடுமுறை விடப்படுகின்றன.
Tags:    

Similar News