செய்திகள்
சீமான்

கேஎஸ் அழகிரியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார்- சீமான்

Published On 2019-10-14 12:16 GMT   |   Update On 2019-10-14 12:16 GMT
தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சென்னை:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர விடுதலைப்புலி ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார். நாம் தமிழர் கட்சியின் கொடியிலும் புலிகளின் படம் இடம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுவை காமராஜ் நகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் சீமான் ஈடுபட்டுள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கந்தசாமி என்பவர் விவசாயி சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நேற்று முன்தினம் விக்கிரவாண்டி அருகே உள்ள கஞ்சனூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சீமான் பங்கேற்று பேசினார். அப்போது ராஜீவ் காந்தியை கொலை செய்தது சரிதான் என்பது போன்று அவரது பேச்சு அமைந்து இருந்தது.

சீமானின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது பேச்சுக்கு காங்கிரசார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சீமான் கூறியதாவது:-

இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்தவை குறித்து கே.எஸ். அழகிரியுடன் நேருக்குநேர் விவாதிக்க தயார். ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்காக காங்கிரஸ் என்ன செய்தது. 110 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி இருக்கிறதென்றால் தேர்தலில் தனித்துப் போட்டியிடலாமே?.

காவிரி நதிநீர் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன? காங்கிரஸ் செய்த நலதிட்டங்களை மேடையில் சொல்லி வாக்கு கேட்கலாமே? காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளும் தனித்த நின்று போட்டியிட்டால் காணாமல் போய்விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News