செய்திகள்
அடானு தாஸ்

டோக்கியோ ஒலிம்பிக் - வில்வித்தையில் இந்திய வீரர் அடானு தாஸ் தோல்வி

Published On 2021-07-31 02:31 GMT   |   Update On 2021-07-31 02:31 GMT
டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் அடானு தாஸ் ஏமாற்றம் அளித்தார்.
டோக்கியோ:

டோக்கியோ ஒலிம்பிக்கின் வில்வித்தை போட்டியில் இன்று காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் அடானு தாஸ், ஜப்பான் வீரர் டகாஹாரு பருகவா ஆகியோர் மோதினர்.

இதில் அடானு தாஸ் 25-27, 28-28, 28-27, 28-28, 26-27 என்ற கணக்கில் இழந்தார். இதன்மூலம் பருகவா டகாஹாரு 6-4 என்ற கணக்கில் அடானு தாசை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
Tags:    

Similar News