தொழில்நுட்பம்
நாசா

நிலவின் வளங்களை கைப்பற்ற புது திட்டம் - தனியார் நிறுவனங்களை தேடும் நாசா

Published On 2020-09-11 11:58 GMT   |   Update On 2020-09-11 11:58 GMT
நிலவில் உள்ள வளங்களை கைப்பற்றி ஆய்வு செய்ய நாசா தனியார் நிறுவனங்களை தேடி வருகிறது.


சந்திரனில் உள்ள பாறைகள் மற்றும் பாறை படிவங்களை எடுத்து வர உலகெங்கிலும் உள்ள தனியார் நிறுவனங்களை நாசா தேடுகிறது. விண்வெளி வளங்களுக்கான புதிய சந்தையை உருவாக்கும் முயற்சியில் நாசா களமிறங்கி இருக்கிறது.

இந்த திட்டம் 2024 க்கு முன் சந்திரனில் உள்ள வளங்களை மீட்டெடுப்பது மற்றும் மாற்றுவதை நிறைவு செய்வதே நோக்கம் என நாசா கூறியுள்ளது.



2024 ஆம் ஆண்டு வாக்கில் முதல் அமெரிக்கப் பெண்ணையும் அடுத்து ஒரு ஆணையும் சந்திரனில் தரையிறக்க நாசா இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. மேலும் நாசா சந்திர வளங்களை கைபற்ற வேண்டும் என நினைக்கிறது.

நாசா கோடிட்டுக் காட்டிய தேவைகளின்படி, ஒரு நிறுவனம் சந்திர மேற்பரப்பில் உள்ள எந்த இடத்திலிருந்தும் ஒரு சிறிய அளவு சந்திரன் கன்மம் அல்லது பாறைகளை சேகரிக்கலாம். பின்னர் அதன் உரிமையை நாசாவுக்கு மாற்ற வேண்டும். உரிமை பரிமாற்றத்திற்குப் பிறகு, சேகரிக்கப்பட்ட பொருள் அதன் பயன்பாட்டிற்கான நாசாவின் ஒரே சொத்தாக மாறும்.

நாசாவின் கட்டணம் சந்திர பாறைபடிவங்களுக்கு மட்டுமே, முன் தொகை 10 சதவிகிதம், அறிமுகம் செய்யப்பட்டதும் 10 சதவிகிதம் மற்றும்  வெற்றிகரமாக முடிந்தவுடன் மீதமுள்ள 80 சதவிகிதம் கொடுக்கப்படும் அதற்கான மீட்டெடுப்பு முறைகளை நாசா தீர்மானிக்கும்.
Tags:    

Similar News