தொழில்நுட்பம்

இந்தியாவில் ரூ.6000 விலை குறைக்கப்பட்ட ஒப்போ ஸ்மார்ட்போன்

Published On 2019-03-02 04:47 GMT   |   Update On 2019-03-02 04:47 GMT
ஒப்போ நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் ரூ.6,000 குறைக்கப்பட்டுள்ளது. #OppoR17Pro #Smartphone



ஒப்போ நிறுவனம் தனது ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலையை ரூ.6,000 குறைத்திருக்கிறது. இந்தியாவில் ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்தது. ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.45,990 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

சூப்பர் VOOC ஃபிளாஷ் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, 25 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் மூன்று பிரைமரி கேமராக்கள் மற்றும் ஏ.ஐ. சார்ந்த அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

தற்சமயம் விலை குறைப்பை தொடர்ந்து ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.39,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒப்போ ஆர்17 ப்ரோ புதிய விலையில் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் பயனர்கள் தங்களது பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ் செய்து ரூ.13,400 வரை குறைக்கப்படுகிறது.



ஒப்போ ஆர்17 ப்ரோ சிறப்பம்சங்கள்:

- 6.4 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
- ஆக்டா-கோர் ஸ்ன்ப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 616 GPU
- 8 ஜி.பி. ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- டூயல் சிம் ஸ்லாட்
- கலர் ஓ.எஸ். 5.2 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1
- 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.5/2.4, OIS
- 20 எம்.பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.6, TOF 3D கேமரா
- 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, ஏ.ஐ., சோனி IMX576 சென்சார், 3D போர்டிரெயிட்
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி

ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன் ரேடியன்ட் மிஸ்ட் மற்றும் எமரால்டு கிரீன் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.
Tags:    

Similar News