ஆன்மிகம்
இம்மையில் நன்மை தருவார் கோவில்

மகாளய அமாவாசை: இம்மையில் நன்மை தருவார் கோவிலில் தர்ப்பணம் கொடுக்க அனுமதி இல்லை

Published On 2020-09-16 05:41 GMT   |   Update On 2020-09-16 05:41 GMT
நாளை(வியாழக்கிழமை) மகாளய அமாவாசை அன்று இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு தற்காலிக அனுமதி கிடையாது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை :

மதுரை மேலமாசிவீதியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்டது இம்மையிலும் நன்மை தருவார் கோவில். இந்த கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வருகை தருவார்கள். தற்போது கொரோனா தொற்று காரணமாக பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்து சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனத்திற்கு அனுமதித்து வருகிறார்கள். எனவே காலை 7.15 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம்.

இந்த நிலையில் நாளை(வியாழக்கிழமை) மகாளய அமாவாசை வருகிறது. அன்றைய தினம் இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு தற்காலிக அனுமதி கிடையாது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News