செய்திகள்
கோப்புப்படம்.

‘ஸ்மார்ட் உடுமலை’ திட்டம்- அதிகாரிகள் ஆய்வு

Published On 2021-07-22 11:56 GMT   |   Update On 2021-07-22 11:56 GMT
உடுமலை வழியாக பழனி, ஆனைமலை மாசாணியம்மன் கோவில், ஆழியாறு அணை பூங்கா, குரங்கு அருவி மற்றும் வால்பாறை, கொடைக்கானல் செல்லலாம்.
உடுமலை:

உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட அமராவதி, உடுமலை, கொழுமம், வந்தரவு ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. வன விலங்குகள், அரிய வகை பறவைகள் என சிறந்த உயிர்ச்சூழல் மண்டலம் மற்றும் வனச்சுற்றுலாவுக்கு உகந்த இடமாக இந்த பகுதி உள்ளது. 

கேரளா மூணாறு, மறையூர் ஆகிய சுற்றுலாத்தலங் களுக்கு செல்லும் பிரதான வழித்தடத்தில் உடுமலை நகரம் அமைந்துள்ளது. அதேபோல்  அருகில் உள்ள அமராவதி அணையும்í ‘சிறுவர் பூங்கா, நீச்சல் குளம், அமணலிங்கேஸ்வரர் கோவில், பஞ்சலிங்க அருவி, அணை என திரு மூர்த்திமலையும் மாநில அளவில் சிறப்பு வாய்ந்த சுற்றுலாத்தலங்களாக உள்ளன.

உடுமலை நகரில் இருந்து திருமூர்த்திமலை, அமராவதி மற்றும் சின்னாறு, மூணாறு பகுதிகளுக்குச் செல்லும் வழியில் உள்ள இயற்கை சூழல், எழில் மிகுந்த காட்சியுடன் சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. உடுமலை வழியாக பழனி, ஆனைமலை மாசாணியம்மன் கோவில், ஆழியாறு அணை பூங்கா, குரங்கு அருவி மற்றும் வால்பாறை, கொடைக்கானல் செல்லலாம். 

எனவே உடுமலை நகரானது சுற்றுலாத்தலங்களின் மையப்பகுதியில் சிறந்த ‘ஹாட்ஸ்பாட்’ ஆக உள்ளது. புகழ் பெற்ற சுற்றுலாத்தலங்கள் உடுமலையை சுற்றி அமைந்துள்ளதால்  உடுமலை நகருக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். 

எனவே சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் சுற்றுலா வாயிலாக அதிக வருவாய் ஈட்டும் வகையிலும்  உடுமலை நகரத்தை சீர்மிகு நகரமாக மாற்ற  திருப்பூர் மாவட்ட சுற்றுலா தொலைநோக்கு வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ‘ஸ்மார்ட் உடுமலை’ திட்டத்தை செயல்படுத்த உடுமலை நகராட்சியுடன் இணைந்து மாவட்ட சுற்றுலாத்துற  நடவடிக்கை எடுத்துள்ளது.

இத்திட்டத்திற்கான ஆலோசனை மற்றும் ஆய்வுப்பணி நடந்தது. மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் அரவிந்த்குமார், நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர் தங்கராஜ், சுற்றுலா வளர்ச்சிக் குழு உறுப்பினர்கள் மத்தீன், சண்முகராஜ், ஜவகர், பிரசாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

அப்போது  மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் அரவிந்த் குமார் கூறுகையில், 

சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், ‘ஸ்மார்ட் உடுமலை’ திட்டத்தின் கீழ்  உடுமலை நகரப்பகுதியில் ‘தீம் பார்க்‘, நீச்சல் குளம்,  செல்பி ஸ்பாட், எழில் உடுமலை, நடைப்பயிற்சி மேற்கொள்ள ஸ்மார்ட் நடைபாதை, புதிய சிறுவர் பூங்காக்கள் உருவாக்குதல் மற்றும் புதுப்பித்தல் ஆகிய திட்டங்களை முதல் கட்டமாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

Similar News