தொழில்நுட்பம்
பிஎஸ்என்எல்

இந்தியாவில் விரைவில் பிஎஸ்என்எல் 4ஜி அறிமுகம்?

Published On 2020-11-20 07:41 GMT   |   Update On 2020-11-20 07:41 GMT
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


இந்தியாவில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை வர்த்தக வெளியீடு பற்றி மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் விரைவில் முடிவு எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 4ஜி சேவை அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இதுவரை முடிவு செய்யப்படவில்லை. எனினும், அரசாங்கம் விரைவில் இதுபற்றிய அறிவிப்பை வெளியிடும் என தெரிகிறது.

வர்த்தக ரீதியில் 4ஜி வெளியீட்டு விவகாரத்தில் நாங்கள் எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்க முடியாது. மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் தான் இதுபற்றிய இறுதி முடிவை எடுக்க வேண்டும் என மூத்த அதிகாரி ஒருவர் தனியார் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். 



ஏற்கனவே இதுபற்றி மத்திய அமைச்சகத்திற்கு பிஎஸ்என்எல் சார்பில் பதில் அளிக்கப்பட்டு விட்டது. எனினும், இதற்கு எம்பவர்டு டெக்னாலஜி குரூப் பரிந்துரை வழங்க வேண்டும். 

ரிலையன்ஸ் ஜியோவுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் திறன் இருந்தும் மத்திய அரசு பிஎஸ்என்எல் சலுகை விஷயத்தில் அலட்சியம் காட்டி வருவதாக கூறி பிஎஸ்என்எல் அதிகாரிகள் நவம்பர் 26 ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து உள்ளனர்.

இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ 2016 ஆண்டு வாக்கில் குறைந்த விலை டேட்டா வழங்கும் பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து களமிறங்கியது. தற்சமயம் டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமாக உருவெடுத்து இருப்பதோடு டெலிகாம் சந்தையை முழுமையாக மாற்றியமைத்து இருக்கிறது. 
Tags:    

Similar News