செய்திகள்
தமிழக அரசு

தமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு

Published On 2020-10-25 00:27 GMT   |   Update On 2020-10-25 00:27 GMT
தமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

தமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

காஞ்சிபுரம், திருவள்ளூர், பெரம்பலூர், மதுரை, கரூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி காஞ்சிபுரம் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தருமபுரி ஆட்சியராக இருந்த மலர்விழி கரூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தருமபுரி ஆட்சியராக கார்த்திகா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த அன்பழகன், மதுரை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக அரவிந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை ஆட்சியராக இருந்த வினய், சேலம் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில் இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா, திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக வெங்கட பிரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் சங்கர், பதிவுத்துறை ஐஜியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News