ஆன்மிகம்
நாகாலம்மன் கோவில் வேப்பமரத்தில் பால் வடியும் அதிசயம்

நாகாலம்மன் கோவில் வேப்பமரத்தில் பால் வடியும் அதிசயம்

Published On 2020-10-20 05:37 GMT   |   Update On 2020-10-20 05:37 GMT
பிரசித்திப் பெற்ற நாகாலம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற பக்தர்கள் வேப்பமரத்தில் பால் வடிந்த அதிசயத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்தனர்.
சித்தூர் மாவட்டம் கங்காதரநெல்லூர் மண்டலம் புக்காபுரம் பஞ்சாயத்து போடிரெட்டிகண்டிகை கிராமத்தில் பிரசித்திப் பெற்ற நாகாலம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அங்கு, பெரிய வேப்பமரம் ஒன்று பல ஆண்டுகளாக உள்ளது. அந்த வேப்பமரத்தில் இருந்து நேற்று காலை திடீரெனப் பால் வடிந்தது.

கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற பக்தர்கள் வேப்பமரத்தில் பால் வடிந்த அதிசயத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்தனர். உடனே பக்தர்கள் வேப்பமரத்தின் மீது மஞ்சள், குங்குமத்தை தூவி, தேங்காய் உடைத்து, கற்பூரம் மற்றும் நெய்தீபம் ஏற்றி பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். அந்தப் பகுதியில் இடைவிடாமல் பலத்த மழை பெய்ததால் கொட்டு மழையைப் பொருட்படுத்தாமல் நனைந்தபடி வரிசையில் நின்று பக்தர்கள் வேப்பமரத்தை வலம் வந்து வணங்கி வழிபட்டனர்.
Tags:    

Similar News