வழிபாடு
சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பொன்னப்பன், பூமிதேவி பக்தர்களுக்கு அருள்பாலித்ததையும் படத்தில் காணலாம்.

திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2022-03-21 07:11 GMT   |   Update On 2022-03-21 07:11 GMT
திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் பங்குனி பெருவிழா நாட்களில் தினமும் காலை வெள்ளி பல்லக்கிலும், மாலை பல்வேறு வாகனங்களிலும் பெருமாள் தாயார் வீதி உலா நடக்கிறது.
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் ஒப்பிலியப்பன் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பல பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான பங்குனி பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி பொன்னப்பன் பூமிதேவி புஷ்ப அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். அப்போது கொடிமரத்திற்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

விழா நாட்களில் தினமும் காலை வெள்ளி பல்லக்கிலும், மாலை பல்வேறு வாகனங்களிலும் பெருமாள் தாயார் வீதி உலா நடக்கிறது. வருகிற 28-ந்தேதி காலை 7 மணிக்கு தேசிக ரோடு பெருமாள் தாயார் தேரில் எழுந்தருளுகிறார். 9 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஜீவானந்தம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News