தொழில்நுட்பம்
போக்கோ

போக்கோ எப்3 சீரிஸ் வெளியீட்டு விவரம்

Published On 2021-03-05 11:51 GMT   |   Update On 2021-03-05 11:51 GMT
போக்கோ பிராண்டின் புதிய போக்கோ எப்3 சீரிஸ் வெளியீட்டை அதன் தலைமை செய்தி தொடர்பாளர் சூசகமாக தெரிவித்தார்.
 

போக்கோ எப்3 மற்றும் போக்கோ எப்3 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் மார்ச் மாதத்திலேயே அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. போக்கோ நிறுவனத்தின் சர்வதேச செய்தி தொடர்பாளர் அங்குஸ் கை ஹோ ஜி தனது  ட்விட்டரில் மார்ச் எனும் வார்த்தை பதிவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து புது போக்கோ ஸ்மார்ட்போன்கள் மார்ச் மாதத்திலேயே அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. சீன சந்தையில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி கே40 மற்றும் கே40 ப்ரோ மாடல்கள் ரி-பிராண்டு செய்யப்பட்டு போக்கோ எப்3 மற்றும் எப்3 ப்ரோ பெயர்களில் அறிமுகம் செய்யப்படலாம்.



இரண்டு புதிய போக்கோ ஸ்மார்ட்போன்களும் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். முன்னதாக போக்கோ எப்1 ஸ்மார்ட்போன் 2018 ஆம் ஆண்டு மிக குறைந்த விலையில் அறிமுகமாகி, சந்தையில் அமோக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், இம்முறையும் போக்கோ பிராண்டு இரு மாடல்களின் விலையை சந்தையில் பெரும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யலாம். போக்கோ எப்3 ஸ்மார்ட்போன் ரெட்மி கே40 மாடலின் அம்சங்களையும், எப்3 ப்ரோ மாடல் ரெட்மி கே40 ப்ரோ அம்சங்களையும் கொண்டிருக்கும்.
Tags:    

Similar News