ஆன்மிகம்
லோகநாதப் பெருமாள்

குழந்தை வரம் அருளும் லோகநாதப் பெருமாள்

Published On 2020-09-10 07:31 GMT   |   Update On 2020-09-10 07:31 GMT
குழந்தை வரம் வேண்டி இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர். கடன் தொல்லையால் அவதிப்படுபவர்களின் குறைகளை இத்தல இறைவன் தீர்த்து வைப்பதாக பக்தர்கள் கருதுகின்றனர்.
இவ்விடம் நாகபட்டிணம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நாகபட்டிணம்- திருவையாறு சாலையில் நாகபட்டிணத்திலிருந்து 8 கிமீ தொலைவிலும், சிக்கலிலிருந்து 2 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. வசிட்டர் முனிவர் கண்ணன் மீது பக்தி கொண்டு வெண்ணையால் கண்ணனை உருவாக்கி வழிபட்டு வந்தார். வசிட்டரின் பக்தியின் காரணமாக வெண்ணைக் கண்ணன் உருகவில்லை. கண்ணன் ஒருநாள் சிறுவனாக வந்து வெண்ணைக் கண்ணனை உண்டு ஓடத் தொடங்கினான். இதனை அறிந்த வசிட்டர் சிறுவனை பிடிக்க விரட்டினார். சிறுவன் ஓடிய வழியில் முனிவர்கள் சிலர் கண்ணனை நினைத்து தவம் இயற்றிக் கொண்டிருந்தனர். ஓடி வந்த சிறுவனை அவர்கள் கண்ணன் என உணர்ந்து இத்தலத்தில் தங்கி பத்தர்களுக்கு அருள்புரியுமாறு வேண்டிக் கொண்டனர்.

கண்ணனை தன் அன்பினால் கட்டிப்போட்ட இடம் ஆதலால் இவ்விடம் கண்ணங்குடி என்று அழைக்கப்படுகிறது. இங்கு மூலவரும் உற்சவரும் ஒரே மாதிரியாகக் காட்சியளிப்பது இத்தலச் சிறப்பாகும். இங்கு கருடாழ்வார் கைகளைக் கட்டிய நிலையில் உள்ளார். இத்தலத்தில் நடைபெறும் திருநீரணி விழா சிறப்பு வாய்ந்தது. இத்திருவிழாவில் பெருமாள் உட்பட அனைவரும் திருநீறு அணிகின்றனர். சைவ‌ வைணவ சமய ஒற்றுமைக்கு சான்றாக இவ்விழா நடத்தப்படுகிறது.

108 திவ்யதேசங்களில் இத்தலம் 18-வது ஆகும். குழந்தை வரம் வேண்டி இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் பால்பாயாசம் படைத்து வழிபாடு மேற்கொள்கின்றனர். வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாதவர்கள், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்களின் குறைகளை இத்தல இறைவன் தீர்த்து வைப்பதாக பக்தர்கள் கருதுகின்றனர். இங்கு திருமால் லோகநாதப் பெருமாள், சியாமளமேனிப் பெருமாள் என்ற பெயர்களிலும், தாயார் லோகநாயகி என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள். பிரம்மா, கௌதமர், வசிட்டர், பிருகு, உபரிசரவசு, திருமங்கையாழ்வார் ஆகியோர் இத்தல இறைவனை நேரில் தரிசித்துள்ளனர்.
Tags:    

Similar News