வழிபாடு
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் தங்க ரிஷப வாகனத்தில் சாமி வீதியுலா

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் தங்க ரிஷப வாகனத்தில் சாமி வீதியுலா

Published On 2022-03-03 07:15 GMT   |   Update On 2022-03-03 07:15 GMT
தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலக புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. மகா சிவராத்திரியை முன்னிட்டு இங்கு நேற்று முன்தினம் இரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

சிவராத்திரி கால பூஜைகள் நிறைவடைந்த பின் நேற்று காலை தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு, சிவன் கோவில்களில் ரிஷப வாகனத்தில் சுவாமிகள் வீதியுலா செல்வது வழக்கம். திருநள்ளாறு கோவிலில் மட்டுமே தங்க ரிஷப வாகன வீதியுலா நடைபெறுவது சிறப்பாகும். நிகழ்ச்சியில், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News