செய்திகள்
ஓமன் கடலில் மூழ்கிய இலங்கை நாட்டை சேர்ந்த படகை படத்தில் காணலாம்.

ஓமன் கடலில் மூழ்கிய இலங்கை படகு மீட்பு

Published On 2020-11-21 05:49 GMT   |   Update On 2020-11-21 05:49 GMT
ஓமன் கடலில் மூழ்கிய படகில் இருந்தவர்களை, நீர்மூழ்கி வீரர்கள் உதவியுடன் மீட்டு மிதவைகள் மூலம் கரைக்கு அழைத்து வந்தனர்.
மஸ்கட்:

மஸ்கட் துறைமுகம் மத்திய கிழக்கு பகுதிகளில் கடல்வழி போக்குவரத்தில் முக்கிய வர்த்தக மையமாக விளங்கி வருகிறது. ஆசிய நாடுகளில் இருந்து அதிகமான சிறு கப்பல் மற்றும் படகுகள் அதிக அளவில் வர்த்தக தேவைகளுக்காக வந்து சென்றவாறு உள்ளன. இதில் ஓமன் கடலில் நேற்று முன்தினம் பலத்த காற்று வீசிக்கொண்டு இருந்தது. அப்போது இலங்கை நாட்டை சேர்ந்த மரத்திலான படகு ஒன்று காரை ஏற்றிக்கொண்டு மஸ்கட் துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டு இருந்தது.

சூறாவளி காற்று வீசியதால் அந்த படகால் தொடர்ந்து பயணம் செய்ய முடியவில்லை. மேலும் தண்ணீரில் கவிழ்ந்து மூழ்க தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த படகு ஊழியர்கள் ‘மே டே’ எனப்படும் அவசரகாலத்தில் அளிக்கப்படும் சமிக்ஞையை வெளியிட்டனர்.

அந்த தகவலை மஸ்கட் கடலோர பாதுகாப்பு படையினர் மற்றும் ராணுவத்தினர் பெற்றுக்கொண்டு தகவல் அனுப்பப்பட்ட இடத்தை நோக்கி மீட்பு குழுவினருடன் சென்றனர். அதற்குள் அந்த படகு முழுவதும் மூழ்கும் நிலையில் இருந்தது. உடனடியாக தண்ணீரில் தத்தளித்துக்கொண்டு இருந்தவர்களை நீர்மூழ்கி வீரர்கள் உதவியுடன் மீட்டு மிதவைகள் மூலம் ஏற்றிக்கொண்டு கரைக்கு வந்தனர். அவர்களுக்கு முதலுதவி மற்றும் தேவையான மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டது. பின்னர் கடலில் மூழ்கிய படகை பத்திரமாக மீட்டனர்.
Tags:    

Similar News